போகர் சித்தாந்தசபை எனும் இந்த சித்தர் வழி ஆன்மீக அமைப்பானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இயங்கிவரும் ஒரு பிரபஞ்ச ஆய்வு மையம் ஆகும்.

இது திரு Dr.போகர் வசீகரன் அய்யா அவர்களால் துவங்கப்பட்டு நடந்து வரும் ஒரு ஆன்மீக சபை ஆகும்.இது சித்தர்களின் வித்தைகள் தத்துவங்கள் பாரம்பரிய கலைகள் ஆரோக்கிய ரகசியங்கள் பிரபஞ்ச ரகசியங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அதை எளிமைப்படுத்தி சாமானியருக்கும் புரியும் வகையில் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்கள் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் திரு Dr.போகர் வசீகரன் அய்யா அவர்கள் நடத்தி வருகிறார்.

இதுவரை யாரும் சொல்லாத கேட்டறியாத சித்தர்களின் ரகசியங்கள் மற்றும் வித்தைகளின் இன்னொரு பக்கத்தை அனைவரும் பின்பற்றும் வகையில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக சொல்வதே இவரின் சிறப்பம்சம் ஆகும்.

சித்தர்களின் சூட்சும அதி ரகசிய வித்தைகளை எளிமையாக கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

சித்தர் போகர் பெருமானிடம் நேரடி உபதேசமும் ஆசியும் பெற்றவர்.

தமிழையும் அதன் சிறப்பு தன்மையையும் நீண்ட நாட்கள் ஆய்வு செய்து அதன் மந்திர தன்மையை கண்டுணர்ந்தவர்.

யோகா மற்றும் தியான முறைகளில் சிறந்த ஆய்வும் செயல்பாடும் புரிந்தமைக்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர். சித்த மருத்துவத்தில் பட்டய படிப்பு படித்தவர். சுமார் 18 வருடங்களாக சித்தர்கள் அருளிய வித்தைகள் மற்றும் ரகசியங்களை ஆய்வு செய்த அனுபவம் உள்ளவர்.

மனிதன் மனிதனாக வாழவேண்டும்.வாழ்க்கை வாழ்க்கையாக வாழப்பட வேண்டும் என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னிறைவு பெற்ற வாழ்வை நிறைவாக வாழ்ந்து பின்னர் நம்முடைய பாரம்பரிய சொத்தான சித்தர்களின் பொக்கிஷ கலைகளை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி வருபவர்.அதை தனி மனிதனின் வாழ்வில் நிறைவேற்றி சாதித்து காட்டியும் வருகிறார்.

மேலும் போகர் சித்தாந்தசபை எனும் இந்த அமைப்பின் மூலமாக பல சமூக சேவைகளும் செய்து வருகிறார். குறிப்பாக வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் 125 வாரங்களாக செய்து வருகிறார். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று சித்த வைத்தியம் மற்றும் வர்ம வைத்தியம் இலவசமாக செய்து வருகிறார்கள். மேலும் மாதந்தோறும் 28 ஆம் தேதி அன்று இலவசமாக சுமார் 1000 நபர்களுக்கு கண்களுக்கு மருந்து விடும் சேவையை செய்து வருகிறார்.

மேலும் சமுதாய பணிகளான மரம் நடுதல், கல்வி சேவை செய்தல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று தேவையான உதவிகளை செய்தும் வருகிறார்.