அன்னதானம்

போகர் சித்தாந்தசபை சார்பில் வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று மாலை சுமார் 6 மணியளவில் சுமார் 250 நபர்களுக்கு அன்னதானம் செய்யும் சேவை நடந்து வருகிறது.இது கடந்த செப்டம்பர் 2017 முதல் நடந்து வரும் பசிப்பிணி ஆற்றும் அற்புத சேவையாகும்.அன்னதானம் செய்வதன் மூலம் பிறவிப்புண்ணியம் பெற முடியும் என வேத நூல்கள் கூறுகின்றன.எப்படிப்பட்ட பாவ தோஷங்களில் இருந்தும் விடுதலை அடைய முடியும் என கூறுகின்றன.அத்தகைய அற்புத சேவையை நமது போகர் சித்தாந்தசபை நிறுவனர் திரு Dr .போகர் வசீகரன் அய்யா அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். இது போகர் பெருமானால் உருவான பழனியில் நடந்து வருவது இன்னும் சிறப்பாக கருதப்படுகிறது.

அன்னதான சேவையில் பங்கெடுக்க விரும்பும் நபர்கள் தங்கள் அன்பான பங்களிப்பை வழங்கலாம்.பசிப்பிணி ஆற்றிய பெருமையும் புண்ணியமும் பெறலாம். நன்றிகள்.