🙏🙏 குருவே சரணம் நற்பவி 🙏🙏 🌷 இறையாய் இரு சித்தர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது அவர்களின் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் எனும் கொள்கைதான்.அவர்கள் யோகத்தில் உயர்நிலையை அடைய தேவையான அத்தனை ரகசியங்களையும் இறைவன் நம்மை சுற்றிலும் நம் கண்ணில் படும்படியாக வைத்துள்ளான் என்பதை நம்பினார்கள்.உணர்ந்தார்கள். வெற்றி பெற தேவையான அனைத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.வெற்றியும் பெற்றார்கள். உதாரணமாக நம் ஜென்மங்கள்தோறும் நம்மை தொடர்ந்து வரும் எந்தமாதிரியான தோஷங்களையும் விலக்கிக்கொள்வதற்கான ரகசியங்களை தேடியபோது அதை ஒரு இடத்தில் கண்டனர்.அதை உற்று நோக்கியபோது அதில் ஒளிந்துள்ள ரகசியம் அனைத்துவித தோஷ பாவ சாபங்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது என்பதை உணர்ந்தனர்.உணர்ந்து அதை செயல்படுத்தவும் செய்தனர்.செயல்படுத்து வெற்றியும் பெற்றனர்.வெற்றி பெற்ற பின்னர் அதை நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் நல்வாழ்வு வாழ வேண்டும் என விரும்பி தான் இதில் இருந்து எந்த ரகசியத்தை உணர்ந்தார்களோ அதை நமக்கு பின்னால் வரும் நம் சந்ததிகளும் உணரக்கூடிய வகையில் சூட்சுமமாக அதை அதில் அடக்கியும் வைத்தார்கள். அப்படி எதை உணர்ந்தார்கள்.? காகம். இந்த பறவையில் தான் எத்தனை ரகசியங்கள் ஒளிந்துள்ளன. காகம் என்றால் கா அகம் என்பதன் சேர்க்கையாகும்.கா என்றால் காத்தல் என்பதாகும்.எதை காக்க வேண்டும் என்றால் அகத்தை அதாவது அகத்தே உள்ள ஆன்மாவை காக்க வேண்டும்.காக்க வேண்டும் என்றால் அதை அசுத்தங்களில் இருந்து காக்க வேண்டும்.அசுத்தங்களை நீக்கி காக்க வேண்டும் என்பது தான்.அப்படியானால் அகத்தே உள்ள ஆன்மாவாகிய இறைவனை சுத்தம் செய்து காப்பது என்று பொருளாகும். அந்த காகம் எழுப்பும் ஒலிக்கு நம் முன்னோர்கள் கரைதல் என்று பெயர் சூட்டியுள்ளனர்.காகம் ஒளி எழுப்பும்போது கவனித்திருக்கிறீர்களா காகா என ஒலி எழுப்பும்போது தன்னுடைய பிட்டப்பகுதியை உள்ளே இழுத்துஇழுத்து தான் ஒலியை எழுப்பும்.நன்றாக கவனித்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.எப்போதெல்லாம் குதத்தை சுருக்கி அஸ்வினி முத்திரை நடக்கிறதோ அப்போதெல்லாம் நம்முள்ளே உள்ள இறைசக்தி ஊட்டம் பெறும்.அவ்வாறு நமக்குள்ளே இருக்கும் இறைசக்தி ஊட்டம் பெறும்போதெல்லாம் நம்முடைய சாப தோஷங்களை விலக்கிக்கொள்ள ஏதுவான நேரம் ஆகும்.அந்த காகம் எழுப்பும் ஒலியானது கண்டப்பகுதியில் இருந்து அழுத்தமாக புறப்படும்.கண்டம் என்பது நம் உடலில் அண்டம் எனும் தலைப்பகுதியையும் பிண்டம் எனப்படும் உடல் பகுதியையும் இணைக்கும் இடமாகும்.சிவனார் ஆலகால விஷம் நின்று அழிக்கப்பட்ட இடமாகும்.அந்த இடத்தில் நின்ற ஆலகால விஷம் அதனுடைய விஷத்தன்மையை இழந்துவிட்டது,அப்படிப்பட்ட சிறப்புமிக்க இடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த வண்ணம் காகமானது சத்தத்தை எழுப்புகிறது.அந்த சத்தமானது எப்பேர்ப்பட்ட தோஷங்களையும் விலக்கி தரவல்லது ஆகும்.தொண்டையில் உள்ளே சற்று அழுத்தத்துடன் கரகரத்த நிலையில் கொடுக்கப்படும் சத்தத்திற்கு திரிசங்கம் என்று பெயர்.அந்த சத்தத்தினோடு குத்தப்பகுதி சுருக்கிய நிலையில் அஸ்வினி முத்திரையும் வைத்துக்கொள்ள நீங்காத பிறவிதோஷமும் நீங்கிவிடும் என்பது தான் ரகசியமே. இதை எப்போது சித்தர் பெருமக்கள் உணர்த்தார்களோ அப்போதே தான் உணர்ந்த ரகசியத்தை உணர்ந்த இடத்திற்கு சூட்சுமமாக பெயராக வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.நாம் தான் அது தெரியாமல் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்துகொண்டே இருக்கிறோம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.நாம் பிறந்த போதே நம் கடைசிக்காலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.அது வரை நீங்கள் என்னவெல்லாம் சந்திக்க உள்ளீர்களோ அதற்கான தீர்வை சாவியையும் சேர்த்தே தான் இறைவன் படைக்கிறான்.உங்கள் பிறவிக்கான அனைத்தையும் ஒரு பேக்கேஜாக படைத்தது விட்டான்.உணர்ந்தவர்கள் பிறவிப்பேறு அடைகிறார்கள்.புரியாதவர்கள் பிறவி எடுத்து உழல்கிறார்கள். உங்கள் பிறவியை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள முதலில் படைத்தவனை பெருமையை உணருங்கள்.அவன் படைத்த படைப்புகளை ரசிக்க பழகுங்கள்.அந்த ரசனைதான் அனைத்து ரகசியங்களையும் உங்களுக்கு உணர்த்திக்கொடுக்கும். நற்பவி நற்பவி நற்பவி அன்புடன் போகர் சித்தாந்தசபை பழனி 9488008816