இலவச சித்த மருத்துவ முகாம்.

நமது போகர் சித்தாந்தசபையானது ஒவ்வொரு வாரமும் செவ்வாய்தோறும் சித்த மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவம் வர்ம மருத்துவம் போன்ற நமது பாரம்பரிய மருத்துவங்களை இலவச சேவையாக செய்துவருகிறது. இதில் அனைத்து விதமான நோய்களுக்கும் இலவச வைத்தியம் மற்றும் வைத்திய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் போன்றவை இலவசமாகவே வழங்கி வருகிறது. எல்லாவித நோய்களுக்கும் இதை இறைவன் அளித்த அருட்கொடையாக எண்ணி பெரும் சேவையாக செய்து வருகிறது. ஒருவருடைய நோயை குணப்படுத்தும் பணியை சேவையாக செய்ய இறையருள் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்பார்கள்.ஏனெனில் ஒருவருடைய நோயை குணப்படுத்துவத்தின் மூலம் எத்தகைய ஜென்மாந்திர தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்கிறது வேதங்கள்.

அற்புத சேவையில் பங்கெடுக்க விரும்புபவர்கள் தங்களின் அன்பான பங்களிப்பை வழங்கலாம்

நன்றிகள்