நீரின்றி அமையாது உலகு இது வள்ளுவர் வாக்கு.

அந்த நீருக்கு ஆதாரமாக மண்ணில் மரங்கள் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.மண்ணின் வளம் என்பது மரங்களால் தீர்மானிக்கப்படுகிறது. அத்துடன் நாம் சுவாசிக்கும் காற்றும் தூய்மைப்படுவதும் மரங்களால் தான். இதை மண்ணில் நிலை நாட்டும் நோக்குடன் நமது சபையானது பசுமை உலகம் அமைத்திட முனைப்பு காட்டுகிறது.மாதம் தோறும் இயன்ற அளவு மரங்களை நட்டு வைப்பதோடு நின்று விடாமல் அதை பராமரித்திடவும் செய்கிறது.

பலவகையான மரங்களை செல்லும் இடமெல்லாம் முடிந்தவரை நட்டுவைக்கிறது.மேலும் யோக முகாம்கள் நடக்கும் இடங்களில் வருவோர் அனைவரையும் மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி சொல்வதுடன் மரங்கள் நட்டுவைப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.