பஞ்சபூத சிந்தாமணி மந்திர உபதேசம்..
இந்த பிரபஞ்சமும் சரி மனித தேகமும் சரி அனைத்துமே பஞ்சபூதங்களின் சேர்க்கையே..
பஞ்ச பூதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் பிரபஞ்சமும் சரி உடலும் சரி வாழ்வும் சரி எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும்..
நாம் இதுவரை எவ்வளவோ ஆய்வுகள் செய்திருக்கிறோம்..இன்னும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்..அவ்வப்போது ஆய்வு முடிவுகள் வெற்றிகளை தரும்போதெல்லாம் அவற்றை அன்பர்களுக்கு கொடுக்க மறப்பதில்லை..ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே இம்முயற்சிகள் அனைத்துமே..இதுவும் ஒரு புண்ணிய கணக்கிற்குத்தான்..
அப்படி சமீபமாக நாம் கண்டுணர்ந்த ஒரு அற்புத மந்திரம் தான் பஞ்சபூத சிந்தாமணி மந்திரம் .
பஞ்சபூதங்கள் நமக்கு துணை செய்ய தொடங்கிவிட்டால் அனைத்துமே ஜெயம்தான்..எதிரிகள் எதிர்ப்புகள் செய்வினை பாதிப்புகள் தோல்விகள் தடைகள் நோய்கள் மனக்குழப்பங்கள் குடும்ப குழப்பங்கள் தொழில் மற்றும் திருமண தடைகள் என அனைத்துமே சரியாகும்..வாழ்வே தெய்வீகமாகும்..