புரட்டாசி மாதத்திற்கான சிறப்புடனும் யாக பூஜைகளுடனும் பிரம்ம முத்தி யோகா உபதேசம் பழனியில் நடைபெற உள்ளது..
சித்தர்கள் பயன்படுத்திய சர்வ வல்லமை கொண்ட பிரம்மா என்று அழைக்கப்படும் தனஞ்செயன் மற்றும் ஈசானன் எனும் காற்றுகளை நாதி எனும் அபூர்வ சுவாச முறையை பயன்படுத்தி இயக்கும் அற்புத உபதேச முறை..
மட்டுமே நம்முடைய கர்ம கணக்குகளையும் சகலவிதமான தோஷங்களையும் விலக்கி நம்மை காக்க முடியும்..
தனஞ்செயனால் மட்டுமே நம்மை முழுமனிதனாக தன்னிறைவுடன் வாழ வைக்க முடியும்..
தனஞ்செயனால் மட்டுமே நம்மை ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழ வைக்க முடியும்..
தனஞ்செயனால் மட்டுமே பிறப்பையும் இறப்பையும் வெல்லும் வாய்ப்பை மனிதனுக்கு வழங்க முடியும்..
அப்படிப்பட்ட தனஞ்செயனை பயன்படுத்தும் அற்புத சூத்திரத்துடன் பிரம்ம முத்தி யோகா உபதேச வகுப்பு பழனியில் நடைபெற உள்ளது..
புரட்டாசி மாதம் என்பது புரத்து ஆசி அதாவது புரத்தில் இருந்து கிடைக்கும் ஆசி என்பதாகும்..புரம் என்றால் மேல் மாடம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு..மேல் மாடம் என்றால் மூன்றாவது கண் பகுதியாகும்..மூன்றாவது கண் பகுதியில் தான் ஈசானன் எனும் காற்று ஜோதியாக ஒளிரும் இடமாகும்..அந்த பகுதிதான் நமது உடலின் தலைமைப்பீடமாகும்..இந்த மாதத்தில் தான் நம் முன்னோர்கள் அனைவருமே பூமியில் தங்குவதாக சொல்வார்கள்..உண்மையில் முன்னோர்களின் கர்மக்கணக்குகள் நம் மூன்றாவது கண் பகுதியோடு தொடர்பை ஏற்படுத்தும் மாதம் தான் இந்த புரட்டாசி மாதமாகும்..
நம்முடைய முன்னோர்களிடம் இருந்து நாம் அனுபவிக்கும் சகலவிதமான தோஷங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ள இயற்கை கொடுக்கும் அற்புத காலம் தான் இந்த புரட்டாசி மாதம்..அதை தனஞ்செயன் மற்றும் ஈசானன் எனும் இரு காற்றுகளையும் சரியாக பயன்படுத்தி விலக்க தெரிந்தவர்கள் பாக்கியவான்கள் ஆவர்..
அப்படிப்பட்ட அற்புத பிரபஞ்ச திருநாள் புரட்டாசி அமாவாசை அன்று பிரம்ம முத்தி யோகா எனும் சுய தர்ப்பண உபதேசம் பழனியில் நடைபெற உள்ளது..சகலவிதமான தோஷங்கள் சாபங்களில் இருந்து விடுதலை இந்த அற்புத வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
மாலையில் நடக்கும் யாக பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாலை சரியாக 5 .30 மணிக்கு அதிஷ்டான பகுதிக்கு வந்துவிடவும்..யாக பூஜைகள் முடிய சுமார் 1.30 மணி நேரம் ஆகலாம்..சுமார் 7 மணிவரை நடக்கும்..அதற்கு தகுந்தாற் போல் வரவும்..