எங்களை பற்றி
போகர் சித்தாந்த சபை எனும் இந்த ஆன்மீக அமைப்பானது பழனியை சேர்ந்த திரு வசீகரன் என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது..
திரு வசீகரன் அவர்கள் சுமார் 23 வருடங்களாக அதாவது 2001 முதல் சித்தர்களை பற்றியும் சித்த ரகசியங்கள் பற்றியும் நமது பாரம்பரிய கலாச்சாரம் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார்..
போகர் சித்தாந்த சபை எனப்படும் இந்த ஆன்மீக அமைப்பின் நிறுவனர் திரு போகர் வசீகரன் அவர்கள் சித்தர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமாகிய குரு போகர் பெருமானை குருவாக கொண்டு வாழ்ந்து வருபவர்..அவரின் ஆசியையும் உபதேசத்தையும் பெற்றவர்..
மந்திரங்கள் பற்றியும் முத்திரைகள் பற்றியும் காற்றுகள் பற்றியும் இவர் பல்வேறு வகையான ஆய்வுகள் செய்து ஆச்சரியப்படத்தக்க முடிவுகளை கண்டுணர்ந்து அதனை மிக எளிமையாக அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் பயிற்சிகளாக கொடுத்து வருகிறார்..
குறிப்பாக காற்றுகளை பற்றிய நாடிகளை பற்றிய இவரது ஆய்வுகள் பிரம்மிக்கத்தக்கதாக அமைந்துள்ளது..
மேலும் காற்றுகளைப்பற்றியும் நாடிகள் பற்றியும் சக்கரங்கள் பற்றியும் இதுவரை யாரும் சொல்லாத பல அற்புத ரகசியங்களை அனுபவபூர்வமாக ஆதாரத்துடன் விளக்கி சொல்வது இவரது சிறப்பம்சம் ஆகும்..
நாம் மறந்துவிட்ட கலாச்சார பொக்கிஷங்களையும் சித்த வித்தைகளையும் ரகசியங்களையும் மிக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும் படியாக ஆதாரத்துடன் விளக்குவது இவரின் சிறப்பம்சம்
உலகிலேயே தனக்குள்ளே தர்ப்பணம் கொடுக்கும் ரகசியத்தையும் தலையெழுத்து ரகசியத்தையும் அண்டபிண்ட ரகசியத்தையும் வெட்டவெளிச்சமாக உலகிற்கு சித்தர்களுக்கு அடுத்தபடியாக வெளிப்படுத்தியவர்..
அடிப்படையில் இவர் சித்த மருத்துவத்தில் பட்டயப்படிப்பு முடித்தவர்..
யோகாவில் முனைவர் பட்டம் பெற்றவர்..
முத்திரைகளில் சிகிச்சை செய்வதில் மிகவும் வல்லவர்..
காற்றுகளை இயக்கும் சூத்திரம் படித்தவர்..
மிகசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்..
போகர் சித்தாந்த சபையின் மூலமாக ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சுமார் 1000 நபர்களுக்கு காலை மற்றும் மதிய உணவாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது..
மாதத்திற்கு இரண்டு நாட்கள் கலிக்கம் எனப்படும் கண்களில் மூலிகை சாறு பிழிந்து விடுவதின் மூலம் செய்யப்படும் சித்த மருத்துவ சேவை இலவசமாக செய்யப்படுகிறது..
7 குழந்தைகளை தத்தெடுத்து கல்விச்செலவுகள் செய்யப்படுகிறது..